இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தீர்வு காண இலங்கை சுதந்திர தினமான பிப்ரவரி 4-ந் தேதிக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதி பூண்டுள்ளார். கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே, சிறிசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.