ஏர் இந்தியா மீதான குற்றச்சாட்டு! – விமான விபத்து, விதிமீறல்கள் தொடர்பாக DGCA நடவடிக்கை

ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்து நடந்த பயங்கர விபத்தில் 274 பேர் உயிரிழந்ததையடுத்து, ஏர் இந்தியா மீது பல்வேறு விமான விதிமீறல் புகார்கள் எழுந்துள்ளன. இதன்பேரில், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில், விமான பணியாளர்களின் ஓய்வு நேரம், உரிமம் மற்றும் பணிநேர வரம்புகளில் மீறல்கள் நடந்ததை ஏர் இந்தியா தானாகவே ஒப்புக்கொண்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. மே 16, 17 தேதிகளில் பெங்களூரு-லண்டன் விமானங்களை, 10 மணி நேரத்தைத் […]

ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்து நடந்த பயங்கர விபத்தில் 274 பேர் உயிரிழந்ததையடுத்து, ஏர் இந்தியா மீது பல்வேறு விமான விதிமீறல் புகார்கள் எழுந்துள்ளன.

இதன்பேரில், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில், விமான பணியாளர்களின் ஓய்வு நேரம், உரிமம் மற்றும் பணிநேர வரம்புகளில் மீறல்கள் நடந்ததை ஏர் இந்தியா தானாகவே ஒப்புக்கொண்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. மே 16, 17 தேதிகளில் பெங்களூரு-லண்டன் விமானங்களை, 10 மணி நேரத்தைத் தாண்டியும் இயக்க வைத்ததற்காக ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இவற்றில் ஈடுபட்ட மூன்று மூத்த அதிகாரிகளை பொறுப்பிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மீறல் தொடர்ந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் டிஜிசிஏ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu