வான்கூவரில் கனடா இந்திய டான் சுட்டுக்கொலை

May 29, 2023

நேற்று, வான்கூவர் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு பிரஜை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் ஒரு டான் என சொல்லப்பட்டுள்ளது. காவல்துறை அவரை அடையாளம் காணவில்லை; ஆனால், வான்கூவர் ஊடகம், உயிரிழந்த நபர் 28 வயதுடைய அமர்பிரீத் சாம்ரா என தெரிவித்துள்ளது. இவர், நிழல் உலகில் ‘சக்கி’ என அழைக்கப்படுகிறார். வான்கூவரில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வான்கூவர் காவல்துறையினர் அளித்த தகவல்கள் படி, கோஷ்டி மோதல் […]

நேற்று, வான்கூவர் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு பிரஜை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் ஒரு டான் என சொல்லப்பட்டுள்ளது. காவல்துறை அவரை அடையாளம் காணவில்லை; ஆனால், வான்கூவர் ஊடகம், உயிரிழந்த நபர் 28 வயதுடைய அமர்பிரீத் சாம்ரா என தெரிவித்துள்ளது. இவர், நிழல் உலகில் ‘சக்கி’ என அழைக்கப்படுகிறார். வான்கூவரில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வான்கூவர் காவல்துறையினர் அளித்த தகவல்கள் படி, கோஷ்டி மோதல் காரணமாக அவர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், கோஷ்டி மோதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், ஏற்கனவே ஒரு முறை சாம்ராவை கொல்வதற்கு முயற்சிகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்ரா, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் டானாக, வான்கூவர் காவல்துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu