இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் ஸ்டார்மருக்கு விருந்தளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில், ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையில் உக்ரைனுக்கு தொடர்ந்து வலுவான ஆதரவு, பிணைக்கைதிகளை விடுவித்தல், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.