பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டம் தொடர்கிறது.
இந்தியாவில், பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதுவரை 17 தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 18-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடி நிதி, நாளை (சனிக்கிழமை) மகாராஷ்டிராவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். இதன்மூலம், 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள், இது அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.