சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்கா, விளையாட்டுத் திடல் பணிகளுக்கு ரூ24.34 கோடி ஒதுக்கீடு

April 17, 2023

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பள்ளி, பூங்கா, விளையாட்டுத் திடல் பணிகளுக்கு ரூ. 24.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவுரையின்படி, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், […]

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பள்ளி, பூங்கா, விளையாட்டுத் திடல் பணிகளுக்கு ரூ. 24.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவுரையின்படி, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், 1 நீர்நிலை மேம்பாட்டு பணி, 1 மீன் சந்தை அமைத்தல், 1 இறைச்சிக் கூடம் நவீனமயமாக்குதல், 3 பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் 14 திட்டப்பணிகளுக்கு சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.23 கோடி நிதி, பெருநகர சென்னை மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu