ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

December 21, 2023

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், எம்.எல். ஏ பதவி இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதவியில் நீடிக்க முடியாத நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு […]

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், எம்.எல். ஏ பதவி இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதவியில் நீடிக்க முடியாத நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு இந்த பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu