பாராளுமன்ற தேர்தலில் விசிக கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பிய விசிக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பானையை சின்னமாக ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால் மக்களவைத் தேர்தலில் விசிக விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பணை சின்னம் ஒதுக்க உத்தரவிட மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை விசிகவிற்கு ஒதுக்கியது. தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.














