சித்தராமையா மீது மூடா முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதற்கான முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சமூக ஆர்வலர்கள் கவர்னருக்கு மனு அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர், சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந் தேதி, முதல்வர் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்ற பின்னர், நீதிபதி நாகபிரசன்னா, இந்த வழக்கு தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பின்னர் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.