ஏர் இந்தியாவின் குறைந்த விலை விமான வர்த்தகத்தின் தலைவராக அலோக் சிங் நியமனம்

December 24, 2022

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் -ன் தலைமை செயல் அதிகாரியாக அலோக் சிங் இருந்து வருகிறார். அவர், வரும் ஜனவரி மாதம் முதல், ஏர் இந்தியாவின் குறைந்த விலை விமான வர்த்தகத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏர் இந்தியாவின் குறைந்த விலை விமான வர்த்தகத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவை உள்ளடங்கும். ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா […]

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் -ன் தலைமை செயல் அதிகாரியாக அலோக் சிங் இருந்து வருகிறார். அவர், வரும் ஜனவரி மாதம் முதல், ஏர் இந்தியாவின் குறைந்த விலை விமான வர்த்தகத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏர் இந்தியாவின் குறைந்த விலை விமான வர்த்தகத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவை உள்ளடங்கும்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்கு, ஒற்றை தலைமையாக அலோக் சிங் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். எனவே, ஏர் ஏசியாவின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சுனில் பாஸ்கரன், ஏர் இந்தியா புதிதாக தொடங்கியுள்ள விமான பயிற்சி அகாடமியை பொறுப்பேற்று நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கையகப்படுத்தியதில் இருந்து நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாறுதல்கள் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu