ஆல்பாபெட் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்

September 14, 2023

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் பணி அமர்வு குழுவில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த முறை நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆல்பாபெட் நிறுவனம், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை சுருக்கி உள்ளதால், இந்த பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், நடப்பு காலாண்டில் பணி நீக்கத்தில் ஈடுபடும் முதல் பெரு நிறுவனமாக அல்பாபெட் உள்ளது. ஏற்கனவே, 12000 பேரை பணி நீக்கம் செய்யும் ஆல்பாபெட் நிறுவனத்தில், […]

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
நிறுவனத்தின் பணி அமர்வு குழுவில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த முறை நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆல்பாபெட் நிறுவனம், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை சுருக்கி உள்ளதால், இந்த பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், நடப்பு காலாண்டில் பணி நீக்கத்தில் ஈடுபடும் முதல் பெரு நிறுவனமாக அல்பாபெட் உள்ளது. ஏற்கனவே, 12000 பேரை பணி நீக்கம் செய்யும் ஆல்பாபெட் நிறுவனத்தில், இந்த புதிய சுற்று பணி நீக்க அறிவிப்பு, மிகச் சிறிய எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu