கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தைக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
பொங்கல், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ காலங்களில் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் சிறப்பு சந்தை செயல்படுத்தப்படும். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு சந்தை நடைபெற்றது. ஆனால் இந்த பொங்கலுக்கு சிறப்பு சந்தை நடத்தப்படவில்லை. அதற்கான டெண்டர் அழைப்பு எதுவும் கோரப்படவில்லை என்று மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக மாற்று ஏற்பாட்டின் மூலம் பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. கடந்த முறை சிறப்பு சந்தை வியாபாரிகள் சாலையில் கடைகளை போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். இந்த முறை வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறு கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














