இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக அலுவா விதைப்பண்ணை - கேரள முதல்-மந்திரி

December 10, 2022

இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக அலுவாவில் உள்ள விதைப்பண்ணையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளா உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். இருப்பினும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்தில் இருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும். இந்த பண்ணையில் முன்மாதிரியான கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சமநிலை பண்ணைகள் தொடங்கப்படும். பழங்குடியினர் பகுதிகளில் இதை செயல்படுத்த மகளிர் சங்கங்கள் உருவாக்கப்படும். […]

இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக அலுவாவில் உள்ள விதைப்பண்ணையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளா உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். இருப்பினும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்தில் இருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும். இந்த பண்ணையில் முன்மாதிரியான கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சமநிலை பண்ணைகள் தொடங்கப்படும். பழங்குடியினர் பகுதிகளில் இதை செயல்படுத்த மகளிர் சங்கங்கள் உருவாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் சுற்றுச்சூழல் பட்ஜெட் இருக்கும். அதில் சுற்றுச்சூழலுக்கான செலவுகள் மற்றும் வரவுசெலவுத் திட்டம் இருக்கும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu