ஜம்முகாஷ்மீரில் உள்ள புனித அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் வருடாந்த யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு 12 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 30,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பல்டால் மற்றும் பஹல்காம் வழியாக பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்கின்றனர். இந்நிலையில், 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' எனப்படும் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ராணுவ தளபதி நேரில் ஆய்வு செய்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததையடுத்து, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் நடவடிக்கையில் பதிலடி கொடுத்திருந்தது.