விண்வெளியில் அதிசக்தி வாய்ந்த பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஜப்பானிய மொழியில் Amaterasu என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் Sun Goddess எனப் பொருளாகும்.
விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள், சாதாரணமாக அதிக சக்தியை வெளியேற்றும் பொருளை விட 1 மில்லியன் மடங்கு அதிகமான சக்தியை வெளியேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு, Oh my God என்ற விண் பொருள் அதீத சக்தி வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. இந்த விண் பொருளுக்கு போட்டியாக Sun Goddess விண் பொருள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிசக்தி வாய்ந்த கதிர்வீச்சுகள் பால்வீதி மண்டலத்துக்கு வெளியில் இருந்து பூமிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை ஸ்பேஸ் டாட் காம் தளத்தில் வெளியாகியுள்ளது.