அமேசான் நிறுவனத்தின் சார்பாக, ‘அமேசான் அகாடமி’ என்ற கல்வி தளம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்த தளத்தின் செயல்பாடுகள் 2023 ஆகஸ்ட் முதல் நிறுத்தப்படும் என அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.
ஐஐடி, ஜேஇஇ, என்ஐடி, ஐஐஎம் போன்ற போட்டி தேர்வுகளுக்கு இந்த தளம் பயிற்சி அளித்து வந்தது. பல மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சி பெறுவதற்காக இணைந்துள்ளனர். இந்த கல்வி தளம் தற்போது நிறுத்தப்படுவதால், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணமும் திருப்பிச் செலுத்தப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான பயிற்சி படிப்படியாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வித் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பயிற்சி புத்தகங்களை 2024 அக்டோபர் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.