கூகுள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வரை கிரீன் கார்டு விண்ணப்பங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. இதனால், வெளிநாடுகளில் இருந்து சென்று, அமெரிக்காவில் தங்கி பணி செய்யும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பாதிப்படைகின்றனர்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று பணி செய்வதற்கான நடைமுறை PERM என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை கடந்த 2023 ஜனவரி மாதத்தில் கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்தது. மேலும், கடந்த ஆண்டு 12,000 கூகுள் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு வரையில் PERM நடைமுறையை தொடரப்போவதில்லை என கூகுள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதே சமயத்தில், 2024 ஆம் இறுதிவரை PERM விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அமேசான் ஊழியர்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.