அமேசான் நிறுவனத்தில், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மனிதவளத் துறைகளில் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இணைய சேவைகள் பிரிவு தலைமை செயல் அதிகாரி ஆதாம் செலிப்ஸ்கி, பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட பணி நீக்கத்தின் பகுதியாக இந்த சுற்று பணி நீக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 9000 ஊழியர்கள் வரை நீக்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. எனவே, அமேசான் வரலாற்றில் இது மிகப்பெரிய பணி நீக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, அமேசான் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாசி, இந்த வருடத்தில் மட்டுமே அமேசானில் இருந்து 18,000 பேர் நீக்கப்படுவதாக கூறினார்.