அமேசான் நிறுவனத்தின் ‘பை வித் பிரைம்’ (Buy with Prime) பிரிவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான டிவிட்ச் மற்றும் ஆடிபில் ஆகிய நிறுவனங்களில், கிட்டத்தட்ட 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமேசான் நிறுவனத்தின் பை வித் பிரைம் பிரிவில் 5% ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 30 பேர் வேலை இழக்க கூடும். ஏற்கனவே, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்கள் அடுத்தடுத்த பணி நீக்கங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், அமேசான் நிறுவனத்தின் பணி நீக்கம் அச்சமூட்டுவதாக உள்ளது என தொழில்நுட்ப ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.