அமேசான் நிறுவனம் Rufus என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
அமேசான் தளத்தில் பொருட்களை வாங்குவதற்கு உதவும் வகையில் புதிய செய்யறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Rufus என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், உரையாடல் வகையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. எழுத்து வடிவிலான உரையாடல்களை இது மேற்கொள்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியாகி உள்ளது. Rufus இடம் ஒரு பொருள் பற்றி கேட்டால், அமேசான் தளத்தில் சிறப்பாக விற்பனையாகும் குறிப்பிட்ட பொருளின் பிராண்ட் பெயர், குறைந்த விலை கொண்ட பிராண்ட் பெயர், அதிக வாடிக்கையாளர் விருப்பங்களை பெற்ற பிராண்ட் பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் தருகிறது.