அமேசான் தளத்தில் உள் நுழைவதற்கு, கடவுச்சொல் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது, புதிதாக, பாஸ் கீ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கணினிகளில் அமேசான் தளத்தை பயன்படுத்துவோருக்கு, பாஸ் கீ அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செயல்களில் இயங்கும் அமேசான் தளங்களில் பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை, இதற்கான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டது. இது, பயனர்கள் தங்கள் அமேசான் கணக்குக்குள் நுழைவதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அதன்படி, விரல் ரேகை, பின் நம்பர் அல்லது முகத்தோற்ற அங்கீகாரம் கூடுதல் பாஸ் கீ ஆக செயல்படும். இதன் மூலம், பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.