அமேசான் - பணி நீக்க அறிவிப்பால் ஒரே நாளில் 5000 கோடி இழப்பு

January 6, 2023

அமேசான் நிறுவனத்தில் மேலும் 18000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில், நிறுவனத்திற்கு 675 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5330 கோடி ரூபாயாகும். இந்த வருடம், பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் என்பதால், பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர், அவரது சொத்து மதிப்பு 106 பில்லியன் […]

அமேசான் நிறுவனத்தில் மேலும் 18000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில், நிறுவனத்திற்கு 675 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5330 கோடி ரூபாயாகும்.

இந்த வருடம், பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் என்பதால், பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர், அவரது சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர்களாக குறைந்தது. அவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, கடந்த ஆண்டில், 10000 ஊழியர்கள் வரை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. அத்துடன், நிறுவனத்தின் இழப்புகளும் அதிகரித்து, 834 மில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu