நாசாவின் நிலவு லேண்டர் ஒப்பந்தத்தை வென்ற ஜெஃப் பெசாசின் ப்ளூ ஒரிஜின்

நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக, நிலவுக்கு லேண்டர் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், லேண்டரை வடிவமைக்கும் ஒப்பந்தம் ஜெஃப் பெசாசின் ப்ளூ ஒரிஜின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த லேண்டர் மூலம், மனிதர்கள் நிலவில் தரையிறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேண்டர், ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட உள்ளதை, நாசா நிர்வாகி பில் நெல்சன் உறுதி செய்துள்ளார். அதே வேளையில், இந்த ஒப்பந்தம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஜெஃப் பெசாஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாசா விஞ்ஞானிகளை நிலவில் தரையிறக்கும் […]

நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக, நிலவுக்கு லேண்டர் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், லேண்டரை வடிவமைக்கும் ஒப்பந்தம் ஜெஃப் பெசாசின் ப்ளூ ஒரிஜின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த லேண்டர் மூலம், மனிதர்கள் நிலவில் தரையிறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேண்டர், ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட உள்ளதை, நாசா நிர்வாகி பில் நெல்சன் உறுதி செய்துள்ளார். அதே வேளையில், இந்த ஒப்பந்தம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஜெஃப் பெசாஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாசா விஞ்ஞானிகளை நிலவில் தரையிறக்கும் முக்கியமான பணியில் இணைந்ததற்காக பெருமைப்படுவதாக அதில் கூறியுள்ளார்.

அதே வேளையில், ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் நிலவு லேண்டர் மூலம், விண்வெளி வீரர்களை விண்ணில் தரையிறக்கும் ஒப்பந்தம், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 3 பில்லியன் டாலர்களுக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. தற்போது, LOX LH2 லேண்டர் தயாரிப்பு, ப்ளூ ஒரிஜின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu