ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டை வாங்கும் விருப்பத்தில் அமேசான்

July 22, 2024

அமேசான் நிறுவனம் ஸ்விக்கி நிறுவனத்தின் துரித வர்த்தக கிளையான இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனம் தானாக விருப்பப்பட்டு இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஸ்விக்கி நிறுவனம் ஐபிஓவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் நிறுவனம், இந்தியாவில் துரித வர்த்தக பிரிவில் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. அதே சமயத்தில், இன்ஸ்டாமார்ட் கிளையை விற்பனை செய்ய ஸ்விக்கி தயார் நிலையில் இல்லை. மேலும், இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கு […]

அமேசான் நிறுவனம் ஸ்விக்கி நிறுவனத்தின் துரித வர்த்தக கிளையான இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனம் தானாக விருப்பப்பட்டு இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஸ்விக்கி நிறுவனம் ஐபிஓவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் நிறுவனம், இந்தியாவில் துரித வர்த்தக பிரிவில் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. அதே சமயத்தில், இன்ஸ்டாமார்ட் கிளையை விற்பனை செய்ய ஸ்விக்கி தயார் நிலையில் இல்லை. மேலும், இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கு 10 முதல் 12 பில்லியன் டாலர்கள் தேவைப்படலாம். எனவே, அமேசான் நிறுவனம் இதனை கையகப்படுத்துவது சாத்தியம் இல்லை எனவும், அமேசான் இதில் முழுமையான விருப்பம் காட்டாது எனவும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu