அமேசான் பிரைமில் இணைவோரின் எண்ணிக்கையில் புதிய உச்சம் - சிறுநகரங்களில் இருந்து 68% பயனர்கள் இணைந்துள்ளனர்

September 24, 2022

இந்தியாவின் மாபெரும் இணைய வர்த்தகத் தளமான அமேசானில் தற்பொழுது, பண்டிகைக் கால விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனை தொடங்கிய முதல் 36 மணி நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் பெண் தொழிலதிபர்களின் நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து, சுமார் 10 லட்சம் பொருட்கள் விற்பனையாகியுள்ளன. அத்துடன், அமேசான் பிரைமில் இணைவோரின் எண்ணிக்கையில் புதிய உச்சம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட பிரைம் உறுப்பினராக இணைவோரின் எண்ணிக்கை 1.9% அதிகரித்துள்ளது. இந்த […]

இந்தியாவின் மாபெரும் இணைய வர்த்தகத் தளமான அமேசானில் தற்பொழுது, பண்டிகைக் கால விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனை தொடங்கிய முதல் 36 மணி நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் பெண் தொழிலதிபர்களின் நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து, சுமார் 10 லட்சம் பொருட்கள் விற்பனையாகியுள்ளன. அத்துடன், அமேசான் பிரைமில் இணைவோரின் எண்ணிக்கையில் புதிய உச்சம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட பிரைம் உறுப்பினராக இணைவோரின் எண்ணிக்கை 1.9% அதிகரித்துள்ளது. இந்த முறை இந்தியாவின் சிறு நகரங்களில் இருந்து 68% உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இந்த விற்பனையின் பொழுது, வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த முறை, 500 மில்லியன் இந்தியர்களுக்கு சலுகை கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில், இந்த வருடம், 50% இந்தியர்கள் தவணை முறை (EMI) அல்லது கட்டணத்தை பின்னர் செலுத்தும் முறை (Pay Later) போன்றவற்றை தேர்ந்தெடுத்துள்ளனர். முதல் பண்டிகை வார விற்பனையின் தரவுகள் படி, இந்தச் செய்தியை அமேசான் வெளியிட்டுள்ளது.

அமேசான் தளத்தின் முதல் பண்டிகை வார விற்பனை மதிப்பு 5.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில், லேப்டாப், 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் போன்றவை அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. இவை தவிர மின்னணு சாதனங்கள் மற்றும் ஃபேஷன் பொருள் விற்பனையாகி உள்ளன. இதுகுறித்து அமேசான் இந்தியாவின் வர்த்தகத் துறை தலைவர் மனிஷ் திவாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய இணைய வர்த்தகத் தளமாகத் திகழ்வதில் அமேசான் பெருமிதம் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu