ஸ்பேஸ் எக்ஸ்க்கு போட்டியாக பரிசோதனை செயற்கைக்கோள்களை அனுப்பிய அமேசான்

அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக, அமேசான் நிறுவனம் செயற்கைக்கோள் மண்டலத்தை அமைக்க திட்டமிட்டு, பணியாற்றி வருகிறது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக இது இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தனது முதல் பரிசோதனை செயற்கைக்கோளை அமேசான் செலுத்தியுள்ளது.அமேசான் நிறுவனம் விண்வெளியில் 3236 செயற்கைக்கோள்களை கொண்ட மண்டலத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் அடியாக, 2 பரிசோதனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அட்லஸ் வி ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்பட்ட அவை, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. […]

அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக, அமேசான் நிறுவனம் செயற்கைக்கோள் மண்டலத்தை அமைக்க திட்டமிட்டு, பணியாற்றி வருகிறது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக இது இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தனது முதல் பரிசோதனை செயற்கைக்கோளை அமேசான் செலுத்தியுள்ளது.அமேசான் நிறுவனம் விண்வெளியில் 3236 செயற்கைக்கோள்களை கொண்ட மண்டலத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் அடியாக, 2 பரிசோதனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அட்லஸ் வி ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்பட்ட அவை, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்கள் 2026 ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தப்படும் எனவும், 2029 ஆம் ஆண்டுக்குள் அனைத்து செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள் மண்டலம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமேசான் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu