அமேசான் நிறுவனம், சர்வதேச அளவில் 9000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் பணியாற்றி வரும் 500 பேர் நீக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் மனிதவளத்துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், பணி நீக்கத்தால் பாதிக்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில், 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக, அமேசான் நிறுவனம் அறிவித்தது. இது அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இருந்தது. அதைத்தொடர்ந்து, மார்ச் மாதத்தில், 9000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டாவது சுற்று பணி நீக்கத்தின் பகுதியாக, இந்தியாவைச் சேர்ந்த 500 பேரின் பணி நீக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.














