200 இந்திய பெண் தொழில் முனைவோருக்கு சர்வதேச வர்த்தக வாய்ப்பு - அமேசான், உமன்நோவேடர் இணைந்து திட்டம்

March 7, 2023

அமேசான் இந்தியா நிறுவனம், உமன்நோவேடர் (Womennovator) உடனான தனது கூட்டமைப்பை அறிவித்துள்ளது. உமன்நோவேடர் என்பது சர்வதேச அளவில் பெண் தொழில் முனைவோருக்கான பாதுகாப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. இதனுடன் கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ளதால், 200 இந்திய பெண் தொழில் முனைவோருக்கு அமேசான் தளம் மூலம் சர்வதேச வர்த்தக வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவிலிருந்து சர்வதேச பிராண்டுகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அழகு சாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜவுளி வியாபாரம், நகை […]

அமேசான் இந்தியா நிறுவனம், உமன்நோவேடர் (Womennovator) உடனான தனது கூட்டமைப்பை அறிவித்துள்ளது. உமன்நோவேடர் என்பது சர்வதேச அளவில் பெண் தொழில் முனைவோருக்கான பாதுகாப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. இதனுடன் கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ளதால், 200 இந்திய பெண் தொழில் முனைவோருக்கு அமேசான் தளம் மூலம் சர்வதேச வர்த்தக வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவிலிருந்து சர்வதேச பிராண்டுகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அழகு சாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜவுளி வியாபாரம், நகை வியாபாரம், மசாலா பொருட்கள் வணிகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பெண் தொழில் முனைவோர்கள் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள், உமன்நோவேடர் அமைப்பைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள் அமேசான் தளத்தில் இணைக்கப்படுவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்களுக்கான தொழில் முறை ஆலோசனைகள், தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட சேவைகள் அமேசான் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டுக்குள், 20 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய இணைய வர்த்தக ஏற்றுமதி இலக்கு எட்டப்படும் என்று அமேசான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu