அமேசான் தனது ஆன்லைன் சந்தையில் பிரீமியம் காபிகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய காபி வாரியத்துடன் இணைந்துள்ளது.
இந்த காபிகள் ரொபஸ்டா மற்றும் அரேபிகா கலவைகளை வழங்கும். மேலும் இந்தியாவின் சிறந்த காபி உற்பத்தி செய்யும் பகுதிகளான கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மற்றும் கூர்க் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது . இது குறித்து ௯றிய அமேசான் இந்தியாவின் நுகர்பொருட்களின் இயக்குநர் நிஷாந்த் ராமன் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு தரமான காபியை அளிப்பதற்கு இந்திய காபி போர்டுடன் கூட்டு சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் விரைவான டெலிவரி செய்யும் வசதியுடன், மலிவான விலையில் வழங்குவதற்கான முயற்சிக்கு ஏற்ப இத்திட்டம் அமைந்துள்ளது எனக் கூறினார்.
அமேசானுடன் காபி வாரியத்தின் ௯ட்டு நடவடிக்கையானது சிறிய விற்பனையாளர்களுக்கும் விற்பனையை அதிகரிக்கும். மேலும் மக்களிடையே காபியின் புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய காபி வாரியத்தின் செயலாளர் கூறியுள்ளார்.