மலிவு விலையில் அமேசான் பிரைம் வீடியோவுக்கான மொபைல் சந்தா அறிமுகம்

November 8, 2022

கைப்பேசிகளில் பயன்படுத்தும் வகையில், மலிவு விலை சந்தா திட்டத்தை அமேசான் பிரைம் வீடியோ அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு, ஆண்டுச் சந்தா 599 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ, ஏற்கனவே கைபேசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஏர்டெல் டெலிகாம் சேவையை உடைய பயனர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் எடிஷன் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது, அனைத்து பயனர்களும் அமேசான் பிரைம் வீடியோ தளத்திற்கான மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது. இதனை, ஒரே ஒரு கைபேசி சாதனத்தில், […]

கைப்பேசிகளில் பயன்படுத்தும் வகையில், மலிவு விலை சந்தா திட்டத்தை அமேசான் பிரைம் வீடியோ அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு, ஆண்டுச் சந்தா 599 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ, ஏற்கனவே கைபேசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஏர்டெல் டெலிகாம் சேவையை உடைய பயனர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் எடிஷன் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது, அனைத்து பயனர்களும் அமேசான் பிரைம் வீடியோ தளத்திற்கான மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது. இதனை, ஒரே ஒரு கைபேசி சாதனத்தில், ஒரே ஒரு மொபைல் எண் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4k தரத்திலான வீடியோக்களை இதில் பார்க்க முடியாது எனவும், ஸ்டாண்டர்ட் டெபினிஷன் (SD) தரத்தில் மட்டுமே வீடியோக்கள் ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதால், இது போன்ற சலுகைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu