அமேசான் பிரைம் லைட் சந்தா கட்டணத்தில் 200 ரூபாய் குறைப்பு

December 22, 2023

அமேசான் நிறுவனம் தனது பிரைம் லைட் சந்தாவுக்கான கட்டணத்தை 200 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளது. அமேசான் ப்ரைம் லைட் சந்தாதாரர்களுக்கான வருடாந்திர கட்டணம் 999 ரூபாய் ஆகும். இதனை 799 ரூபாயாக அமேசான் குறைத்துள்ளது. அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களை விட அமேசான் ப்ரைம் லைட் சந்தாதாரர்களுக்கு சற்று குறைவான வசதிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சந்தாதாரர்களை உயர்த்தும் நோக்கில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் லைட் திட்டத்தில், ஒரு […]

அமேசான் நிறுவனம் தனது பிரைம் லைட் சந்தாவுக்கான கட்டணத்தை 200 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளது.

அமேசான் ப்ரைம் லைட் சந்தாதாரர்களுக்கான வருடாந்திர கட்டணம் 999 ரூபாய் ஆகும். இதனை 799 ரூபாயாக அமேசான் குறைத்துள்ளது. அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களை விட அமேசான் ப்ரைம் லைட் சந்தாதாரர்களுக்கு சற்று குறைவான வசதிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சந்தாதாரர்களை உயர்த்தும் நோக்கில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் லைட் திட்டத்தில், ஒரு நாள், இரு நாள் மற்றும் அதே நாள் டெலிவரி கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் வீடியோ தளத்தில் எச்டி தரத்தில் வீடியோக்களை காணலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அமேசான் பிரைம் மியூசிக் அம்சம் கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2 சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் அமேசான் ப்ரைம் லைட் கொடுக்கப்பட்டிருந்தது. இது தற்போது ஒற்றை சாதனமாக குறைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu