2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் அமேசான்

June 22, 2023

வரும் செப்டம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மே மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் இணையவழி வாலெட் ஆக அமேசான் பே உள்ளது. பொதுமக்கள் இந்த வாலட்டில் பணத்தை செலுத்தி, அதன் மூலம் கட்டணங்களை செலுத்த முடியும். தற்போது, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து 2000 […]

வரும் செப்டம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மே மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் இணையவழி வாலெட் ஆக அமேசான் பே உள்ளது. பொதுமக்கள் இந்த வாலட்டில் பணத்தை செலுத்தி, அதன் மூலம் கட்டணங்களை செலுத்த முடியும். தற்போது, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, அவர்களது அமேசான் பே வேலட்டில் வைப்பு வைக்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. இது தவிர, அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு 50000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. அமேசானின் இந்த அறிவிப்பு பொதுமக்களை கவர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu