புதிய விளையாட்டு சேனல் தொடங்கிய அமேசான் பிரைம் வீடியோ - ஜியோ, ஹாட்ஸ்டாருக்கு போட்டி

November 16, 2023

அமேசான் பிரைம் வீடியோ, விளையாட்டுக்கென பிரத்தியேகமாக சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்காக, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேன்கோட் (Fancode) உடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் மூலம், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 15 விளையாட்டு போட்டிகளை நிகழ் நேரத்தில் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே, ஏற்கனவே நேரலையில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஜியோ, ஹாட்ஸ்டார் போன்ற தளங்களுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம், ஏற்கனவே இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்துள்ளது. தொடர்ந்து, விளையாட்டுத் துறையில் […]

அமேசான் பிரைம் வீடியோ, விளையாட்டுக்கென பிரத்தியேகமாக சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்காக, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேன்கோட் (Fancode) உடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் மூலம், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 15 விளையாட்டு போட்டிகளை நிகழ் நேரத்தில் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே, ஏற்கனவே நேரலையில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஜியோ, ஹாட்ஸ்டார் போன்ற தளங்களுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம், ஏற்கனவே இந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்துள்ளது. தொடர்ந்து, விளையாட்டுத் துறையில் ஒளிபரப்புகளை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்து வந்தது. அதன்படி, இந்த புதிய கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஃபேன்கோட் தளத்தில் விளையாட்டுப் போட்டிகளை பார்ப்பதற்கு, அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 249 ரூபாய் வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தளத்தில் ஒளிபரப்பாகும் நேரலை விளையாட்டுப் போட்டிகளை பிரைம் வாடிக்கையாளர்கள் காண முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu