அமேசான் நிறுவனத்தில் 20000 ஊழியர்கள் பணி நீக்கம்

December 7, 2022

அமேசான் நிறுவனம், உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதம், அமேசான் நிறுவனத்தில் 10000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கை ஆகும். கடைமட்ட ஊழியர்கள் தொடங்கி, உயர்மட்ட ஊழியர்கள் வரையில், அனைத்து அடுக்குகளில் உள்ள […]

அமேசான் நிறுவனம், உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதம், அமேசான் நிறுவனத்தில் 10000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கை ஆகும்.

கடைமட்ட ஊழியர்கள் தொடங்கி, உயர்மட்ட ஊழியர்கள் வரையில், அனைத்து அடுக்குகளில் உள்ள பணியாளர்களும் செயல்திறன் அடிப்படையில் தரம் காணப்பட்டு, இந்தப் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியதாகவும், தற்போது செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமேசான் தரப்பில் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu