அமேசான் நிறுவனத்தில் ஏற்கனவே 10000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 18000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலுக்கு பின்னர் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, பல பெரு நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இரண்டாவது பணி நீக்க அறிவிப்பை அமேசான் வெளியிட்டுள்ளது.
இன்று காலை, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில், “தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. எனவே, மேலும் 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். விரைவிலேயே செயல்படுத்தப்பட உள்ள இந்தப் பணி நீக்க நடவடிக்கை, அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது.














