கடந்த 20 ஆண்டுகளாக, அமேசான் நிறுவனம் இணைய வழியில் புத்தக விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி முதல், இணைய வழி புத்தக விற்பனையை அமேசான் நிறுத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும், அன்றைய நாளின் மதியம் வரை, வாடிக்கையாளர்கள் புத்தகங்களுக்கான ஆர்டர்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆர்டர்கள் தொடர்பான அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் ஜூன் 23ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, பிரிட்டனில் தொடங்கப்பட்ட ‘புக் டெபாசிட்டரி’ எனப்படும் இணைய வழி புத்தக விற்பனை மூலம், இதுவரை 20 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, டெலிவரி கட்டணங்கள் இன்றி இந்த புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக, இணையவழி புத்தக விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.