எம்எக்ஸ் பிளேயர் -ஐ வாங்கும் முயற்சியில் அமேசான்

March 20, 2023

அமேசான் நிறுவனம், பிரபல ஸ்டிரீமிங் சேவையான எம் எக்ஸ் பிளேயர் ஐ வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் சார்பில் எம் எக்ஸ் பிளேயர் இயக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் 300 மில்லியன் பயனர்கள் இந்த ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டைம்ஸ் இன்டர்நெட் குழுமம் மறுசீரமைப்பு நடவடிக்கையாக, தனது பல்வேறு நிறுவனங்களை விற்று வருகிறது. டைன் அவுட், மென்ஸ் எக்ஸ்பி, ஐ […]

அமேசான் நிறுவனம், பிரபல ஸ்டிரீமிங் சேவையான எம் எக்ஸ் பிளேயர் ஐ வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் சார்பில் எம் எக்ஸ் பிளேயர் இயக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் 300 மில்லியன் பயனர்கள் இந்த ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டைம்ஸ் இன்டர்நெட் குழுமம் மறுசீரமைப்பு நடவடிக்கையாக, தனது பல்வேறு நிறுவனங்களை விற்று வருகிறது. டைன் அவுட், மென்ஸ் எக்ஸ்பி, ஐ திவா, ஹைப் உள்ளிட்ட விற்கப்பட்ட நிறுவனங்களின் வரிசையில் எம்எக்ஸ் பிளேயர் இணைய உள்ளது. எம்எக்ஸ் பிளேயர் நிறுவனத்தை வாங்குவதற்கு அமேசான் மட்டுமல்லாது ஜீ என்டர்டெயின்மென்ட், சோனி ஆகிய நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், அமேசான் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வரை இந்த ஒப்பந்த மதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu