அமேசான் நிறுவனம், கங்கை நதி வழியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு நீர் போக்குவரத்து மையம் ஆகியவை இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, கங்கை நதி வழியாக சரக்கு போக்குவரத்தில் அமேசான் நிறுவனம் ஈடுபட உள்ளது. குறிப்பாக, பாட்னா - கொல்கத்தா வழிதடத்தில் அமேசானின் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்பட உள்ளது. ‘அமேசான் ஏர்’ மூலம் இந்தியாவில் வான்வழி போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமேசான் நிறுவனம் நீர்வழிப் போக்குவரத்தையும் தொடங்க உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் விற்பனைச் சங்கிலி மேலும் வலிமை அடைய உள்ளது.