பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியை அமேசான் அறிமுகம் செய்கிறது. இதனை பயன்படுத்துவதற்கு மாதாந்திர சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
நிகழாண்டின் பிற்பகுதியில் அமேசான் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட அலெக்சா வெளியிடப்பட உள்ளது. இது கூகுள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவிகளுடன் நேரடி போட்டியில் களமிறங்குகிறது. மேம்படுத்தப்பட்ட அலெக்சாவை பயன்படுத்துவதற்கான கட்டணம் அமேசான் பிரைம் உடன் இணைக்கப்படாது. தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு களத்தில் அமேசான் நிறுவனம் பின்தங்கி இருப்பதாக ஜெப் பெசோஸ் இதற்கு முன்னர் வருத்தம் தெரிவித்திருந்தார். தற்போது, மேம்படுத்தப்பட்ட அலெக்சா மூலம் செயற்கை நுண்ணறிவு போட்டி களத்தில் அமேசான் கால் பதிக்கிறது.