இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆன முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர், 2024-ம் ஆண்டில், ப்ளூம்பெர்க்கின் $100 பில்லியன் கிளப்பில் இருந்து வெளியேறி உள்ளனர். அமெரிக்க நீதித்துறை விசாரணை மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது.
அதானி மற்றும் அம்பானி ஆகியோரது சொத்து மதிப்பு குறைந்த போதிலும், இந்தியாவின் முதல் 20 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஷிவ் நாடார் மற்றும் சாவித்ரி ஜிண்டால் ஆகியோரின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், உலகளவில் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக வால்மார்ட் வால்டன்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.