இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபியில்) கிட்டத்தட்ட 10% அளவான ₹25.75 டிரில்லியன் என்பது அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு என்று பார்க்லேஸ் - ஹூருன் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் முன்னணியில் உள்ளது.
ஹூருன் அறிக்கையின் படி, பஜாஜ் குடும்பம் ₹7.13 டிரில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக, பிர்லா குடும்பம் ₹5.39 டிரில்லியன் சொத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் மூன்று வணிக குடும்பங்களின் கூட்டு மதிப்பு, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானதாக உள்ளது. மேலும், மதிப்பு மிக்க முதல் தலைமுறை குடும்ப வணிகமாக அதானி குடும்பம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அதானி குடும்பத்தின் சொத்து ₹15.44 டிரில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் இந்த குடும்ப வணிகங்கள் வகிக்கும் முக்கிய பங்கு, ஹூருன் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.