ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக குழுவில் முகேஷ் அம்பானி வாரிசுகள் இணைவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் சமர்ப்பித்த பங்குச்சந்தை அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முகேஷ் அம்பானி வாரிசுகளை, ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் இணைப்பதற்கான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றது. இதில், இரட்டையர்களான இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோருக்கு 98% வாக்குகள் கிடைத்துள்ளன. இவர்களுக்கு வயது 32. மேலும், 28 வயதாகும் ஆனந்த் அம்பானிக்கு 92.75% வாக்குகள் கிடைத்துள்ளன.