வணிகத்தை எளிதாக்க 42 சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று `ஜன் விஸ்வாஸ்’ மசோதாவை தாக்கல் செய்தார். இது வணிகத்தை எளிதாக்கும் நோக்கில் 42 சட்டங்களில் 183 விதிகளைத் திருத்துவதன் மூலம் சிறு குற்றங்களை குற்றமற்றதாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவையில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சிறிய குற்றங்களுக்காக அவர்கள் தண்டிக்கப்பட கூடாது.
சிறிய குற்றங்களுக்காக மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு பதிலாக அபராதம் செலுத்த வகை செய்யப்பட வேண்டும். இதனால் தான் 1,500 பழைய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. 39,000 கடினமான விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 3,500 விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது நீதித்துறையின் வேலை சுமையை குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.