அமெரிக்காவைச் சேர்ந்த கடல் உணவுக் கண்காணிப்புக் குழுவானது இரால் மற்றும் நண்டு உட்பட சில உயிரினங்களை தவிர்க்க வேண்டிய உணவாக சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அதாவது வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இரால் மற்றும் நண்டுகளை வைத்து திமிங்கலங்களை பிடிப்பதாக தகவல் வெளியானது. அதையடுத்து இத்தகைய உயிரினங்களை மக்கள் தங்கள் உணவுப் பட்டியலில் இருந்து நீக்குமாறு கடல் உணவுக் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. அதாவது இக்குழு கடல் உணவின் நிலைத்தன்மையை நான்கு வண்ணங்களாக மதிப்பிடுகிறது. அதன்படி பச்சை நிறம் - சிறந்த உணவையும், சிவப்பு நிறம் தவிர்க்க வேண்டிய உணவையும் குறிக்கிறது. அந்த வரிசையில் அமெரிக்க இரால் அம்பர் நிற மதிப்பீட்டின் கீழ் குறிப்பிடப்பட்டது. இது குறித்து ௯றிய அமெரிக்க வனவிலங்கு அதிகாரிகள், வட அமெரிக்க திமிங்கலத்தின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அது அழிவை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது பற்றி லோப்ஸ்டர்மென்ஸ் அசோசியேஷன் தனது அறிக்கையில், சில அரசியல்வாதிகள் கடல் உணவுக் கண்காணிப்பு குழுவை தாக்கியதற்காக, அக்குழுவானது இரால் தொழிலை நியாயமற்ற முறையில் முடக்கியுள்ளதாகக் ௯றியது. அதோடு கடல் கண்காணிப்பு குழுவின் இந்த அறிவிப்பால் மீனவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் அவ்வறிக்கையில் ௯றப்பட்டது.