ஐக்கிய நாடுகள் சபையின் பகுதியான யுனெஸ்கோ அமைப்பில், அமெரிக்கா மீண்டும் இணைய உள்ளது. யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் அதிகாரம் மேலோங்கி வருவதை தடுக்கும் நோக்கில், அமெரிக்கா இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை இணைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த அமைப்புக்கான நிதி உதவியை நிறுத்தின. அத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது. இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார். அவர், யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர் ஆவ்ட்ரே அசூலேவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.














