2023 ல் வரலாற்று உச்சம் அடைந்த அமெரிக்காவின் ஆயுத விற்பனை

January 30, 2024

கடந்த 2023 ஆம் ஆண்டு, ஆயுத விற்பனையில் அமெரிக்கா வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு 81 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், அமெரிக்க அரசாங்கம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56% உயர்வாகும். அமெரிக்க அரசாங்கம் தவிர, அந்நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்கள் நேரடியாக போர்களுக்கு […]

கடந்த 2023 ஆம் ஆண்டு, ஆயுத விற்பனையில் அமெரிக்கா வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.

நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு 81 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், அமெரிக்க அரசாங்கம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56% உயர்வாகும். அமெரிக்க அரசாங்கம் தவிர, அந்நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்கள் நேரடியாக போர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி உள்ளன. அதன்படி, மொத்தமாக 238 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், அமெரிக்கா சார்பில் ஆயுத விற்பனை நடைபெற்றுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இது உச்சபட்ச ஆயுத விற்பனை ஆகும். போர் நடைபெற்று வரும் நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கும் போர் விமானங்களை வழங்குவதன் மூலமாக அமெரிக்காவுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu