அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய அமெரிக்கர்கள்

July 11, 2023

அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 4 இந்திய அமெரிக்கர்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஏபிசி சப்ளை நிறுவனத்தின் இணை நிறுவனர் டைன் ஹென்றிக்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 1500 கோடி டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி, நேஹா நற்கடே, இந்திரா நூயி ஆகிய 4 இந்திய அமெரிக்க பெண்கள் இந்த பட்டியலில் இடம் […]

அமெரிக்காவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 4 இந்திய அமெரிக்கர்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஏபிசி சப்ளை நிறுவனத்தின் இணை நிறுவனர் டைன் ஹென்றிக்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 1500 கோடி டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி, நேஹா நற்கடே, இந்திரா நூயி ஆகிய 4 இந்திய அமெரிக்க பெண்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள், முறையே, 15, 25, 50, 77 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும், அவர்களின் சொத்து மதிப்பு 240 கோடி, 99 கோடி, 340 கோடி, 52 கோடி டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நால்வரின் மொத்த சொத்து மதிப்பு 406 கோடி டாலர்களாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu