மத்திய அரசு, தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திர பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை அறிவித்தார். ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடி, ஒடிசாவுக்கு ரூ.255.24 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.231.75 கோடி, திரிபுராவுக்கு ரூ.288.93 கோடி வழங்கப்பட உள்ளன. இதற்கு முன், 27 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.18,322.80 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தமிழகம், கேரளாவிற்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக அரசு ரூ.37,000 கோடி நிவாரணம் கோரி இருந்தாலும் மத்திய அரசு அதற்கான அறிவிப்பு வெளியிடவில்லை. அதேபோல் வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்களை எதிர் கொண்ட கேரளாவும் உதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக அரசு ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.