அமித்ஷா - ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திப்பு

February 9, 2024

மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மற்றும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று ஆந்திர முதல் […]

மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மற்றும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று ஆந்திர முதல் மந்திரியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க உள்ளார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேச உள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி மற்றும் ஆதரவு குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வகையில் பா. ஜனதா கூட்டணியில் இடம் பெற ஜெகன்மோகன் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu