துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளம் - அமித்ஷா தொடங்கி வைத்தார்

January 4, 2024

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார். இன்று டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அமித்ஷா, வரும் 2027 டிசம்பருக்குள் இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என நம்புவதாக கூறினார். மேலும், துவரம் பருப்பு கொள்முதலை ஒழுங்குபடுத்தும் நோக்கில், https://esamridhi.in என்ற புதிய இணையதளத்தை துவக்கி உள்ளார். […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இன்று டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அமித்ஷா, வரும் 2027 டிசம்பருக்குள் இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என நம்புவதாக கூறினார். மேலும், துவரம் பருப்பு கொள்முதலை ஒழுங்குபடுத்தும் நோக்கில், https://esamridhi.in என்ற புதிய இணையதளத்தை துவக்கி உள்ளார். மேலும், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை இவற்றில் எது உயர்வோ அந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படும் என கூறினார். அத்துடன், “இந்த இணையதளத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியவை பதிவு செய்து துவரம் பருப்பை விற்கலாம். அவர்களுக்கான பணம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இடைத்தரக்கர்களின் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நேரடியாக பயன் சென்றடையும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu